மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை, கோவில்வத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது, சந்தேநபரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 150 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மெலும், இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.
மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space