முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (12) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (12) மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு முன்னெடுப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space