மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை - 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுவன் ஒருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப உறவினர்களுடன் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்ற போது சிறுவன் வழி தவறிச் சென்றுள்ளார்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிறுவன் ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Violent Crime
மட்டு. வாழைச்சேனையில் 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space