மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு இளையவன் வீதியில் நேற்று திங்கட்கிழமை (23) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கண்காட்சியின்போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் இந்த தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு சுமார் 9.00 மணியளவில், ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை வீடு தேடி சென்று வாளால் தாக்கியதில் இரு இளைஞர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு. ஏறாவூரில் வாள்வெட்டு ; இருவர் படுகாயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space