மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்றையதினம் அதிகாலை 5.00 மணிக்கு திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை மற்றும் திக்கோடை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்ததுடன் இவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் மற்றும் வேன் ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space