இலங்கை மக்களின் வங்கி கணக்குகளை சூறையாடும் மோசடி குறித்து பொது மக்களுக்கு, பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
+63 9692161720 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்த இலக்கத்திலிருந்து வரும் குறுஞ்செய்திகள் மூலம் மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளை அழுத்த அல்லது வங்கி விபரங்களை வழங்குவதையும் முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மைக்காலமாக பல வங்கிகளை போன்று போலியான இணையத்தளங்களை உருவாக்கி பண மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் வங்கிக்கணக்குகளிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space