மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் "கரந்தெனிய ராஜு" என்ற குற்றவாளிக்கு, வெளிநாடு செல்வதற்காக வேறொரு நபரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கமைய, சந்தேக நபர் இன்று சனிக்கிழமை (27) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டு விவகாரம் : ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space