ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஈரான், மத்திய கிழக்கு முழுவதிலும் அப்பாவி குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலிய தாக்குதல்களால் குறிவைக்கப்பட்ட லெபனான் மக்களையும் நினைவுகூர்ந்தார். அந்நாடு பெரியதொரு சோதனையை கடந்து வருவதாகவும் கூறினார்.
புதன்கிழமை (11) செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒன்றுகூடிய தனது விசுவாசிகள் முன்னிலையில் பேசிய பாப்பரசர், போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவவேண்டும் என பிரார்த்திக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
தீவிரமடைந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு பல முறை வேண்டுகோள் விடுத்திருந்ததாகக் கூறிய பாப்பரசர் லியோ, வன்முறை, கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இன்று 12ஆவது நாளாக தொடரும் ஈரான் போருக்கு மத்தியில் அமைதிக்கான அழைப்பினை மீண்டும் விடுத்துள்ளார் பாப்பரசர்.
போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் - அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ
Ad Space
Ad Space
Ad Space
Ad Space