கல்கிஸ்சை - படோவிட்ட பகுதியில், நேற்று சனிக்கிழமை (21) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஹேஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 24 கிராம் ஹேஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space