பொரளை மெகசின் சிறைச்சாலையில் 6ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் 'E' வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர், ஒரே நேரத்தில் அந்த வார்டை விட்டு வெளியே வந்து வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் தொடங்கியுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்தப் பதற்றமான சூழ்நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப் படை (STF) ஆகியவை உடனடியாக சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அந்தப் பதற்றமான சூழ்நிலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்துக்குள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space