‘தித்வா’ புயலால் நிவாரணமின்றி தவிக்கும் பேராதனை, பெனிதெனிய மக்கள் இரண்டாவது முறையும் வெள்ளத்தில் சிக்கி தமக்கு இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனக் கூறி திங்கட்கிழமை (10) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
‘தித்வா’ சூறாவளியினாலும், அண்மையில் பெய்த கனமழையினாலும் தமது வீடுகள் நீரில் மூழ்கி பலத்த சேதமடைந்த போதிலும், பெனிதெனிய பகுதியைச் சேர்ந்த சிலர் தமக்கு நிவாரணம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெனிதெனிய சந்தியில் கூடிய இவர்களது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்ததாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் வீட்டை துப்பரவு செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபாயும், சிலருக்கு மட்டும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். நம்மில் பெரும்பாலோர் சுயதொழில் செய்தே வாழ்ந்தோம்.
இப்போது அவை அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நாங்கள் முற்றிலும் அனாதரவாகிவிட்டோம் எனத் தெரிவித்தனர்.
பெனிதெனியவில் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space