பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ளது Fontainebleau காடு.
மக்கள் பொழுதுபோக்குவதற்காக விரும்பிச் செல்லும் இடங்களில், இந்த Fontainebleau காடும் ஒன்றாகும்.
ஆனால், தற்போது அந்தக் காட்டில் காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. சுமார் 800 ஹெக்டேர் காட்டை காட்டுத்தீ கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பாரீஸிலிருந்து வெளியே செல்லும் A6 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தீ கேபிள்களை சேதப்படுத்தியதால் பாரீஸையும் Lyon நகரையும் இணைக்கும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சீர் செய்யப்பட்டுவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாரீஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக தீயை அணைக்க தீயணைக்கும் விமானங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
அத்துடன், கனடாவும் இரண்டு தீயணைக்கும் விமானங்களை அனுப்ப இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் அருகே வேகமாகப் பரவும் காட்டுத்தீ: 800 ஹெக்டேர் காடு கபளீகரம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space