பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் வியட்நாம் துணை பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இடையில் விசேட இராஜதந்திர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு வியட்நாம் அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும், தற்போதைய விஜயத்திற்கும் பாதுகாப்புச் செயலாளர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இலங்கை பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வியட்நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அந்தநாட்டு துணை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கை செய்திகள்
இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்த அவர், பாதுகாப்பான மற்றும் கூட்டுறவுடனான எதிர்காலத்துக்கான இரு நாடுகளின் பொதுவான இலக்குகளை இந்த சந்திப்பின்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வியட்நாம் துணை பிரதமர் இடையே சந்திப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space