பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோதே, குளவித் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பண்டாரவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space