பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடு வழங்குதல் தொடர்பான கூட்டம் குழப்பத்துடன் நிறைவு!
Ad Space
Ad Space
பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்காகச் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடு வழங்குதல் தொடர்பான கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (04.08.2026) முற்பகல்-10 மணியளவில் யாழ் தெல்லிப்பழைப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காகச் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடு தொடர்பான கலந்துரையாடலில் சத்தியக் கடதாசியின் உள்ளடக்கத்தில் தெளிவின்மை இருப்பதாகக் கூறி காணி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து பொலிஸார் மண்டபத்துக்குள் வரவழைக்கப்பட்டனர்.
இழப்பீடு மட்டும் வேண்டாம்.... எங்கள் காணிகளை மீள வழங்கி எங்களைக் குடியேற்றுங்கள் எனக் காணி உரிமையாளர்கள் வலியுறுத்தியதுடன் குறித்த கூட்டம் முடிவேதும் இன்றி நிறைவுக்கு வந்தது.
Ad Space
Ad Space