தென்மேல் கடற்கரைக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை (31) கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகு மேலதிக சோதனைக்காக புதன்கிழமை (01) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையின் போது, சுமார் 6.2 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய, 300 கிலோகிராம் எடையுள்ள 298 ஹெரோயின் பொதிகள் அந்தப் படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சேர்த்து ஆறு சந்தேகநபர்களும் பல நாள் மீன்பிடி இழுவை மீன்பிடி படகும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படகில் இருந்து பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றல் ; ஆறு சந்தேகநபர்கள் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space