நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கூறப்படுவதைப் போன்று 40 பேர் சிறைச்சாலைக்குள் டெங்கு நோய்க்குள்ளாகி உயிரிழந்திருந்தால், அவர்களது சடலங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை.
சில கைதிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை உண்மையாகும். அவர்களுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. மாறாக டெங்கு நோயால் சிறைச்சாலைக்குள் எவரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space