மஹவ - பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே, இடையில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space