கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் ஐந்து நபர்களுடன் இணைந்து கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டச் சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது அவர்கள் பயணித்த படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீரில் மூழ்கி இளைஞர் பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space