நல்லூரில் இலவச யோகக் கலைக் கற்கைநெறியின் புதிய பிரிவு ஆரம்பம்
Ad Space
Ad Space
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வரும் யோகக்கலை அடிப்படைக் கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயப் பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் அடுத்த மாதம்-06 ஆம் திகதி சனிக்கிழமை காலை-06 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. .
சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06 மணி முதல் காலை-08 மணி வரை நடைபெறும் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும். சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இந்த அடிப்படைக் கற்கைநெறியைப் பூரணமாக முடிப்பவர்களுக்குக் கல்விn அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
Ad Space
Ad Space