பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் அதிவேகமாக வந்த ரயிலில் மோதிய காட்டு யானை ஒன்று, கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் மெனிக்திவெல கிராமத்திற்குள் சுற்றித் திரிவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 2:30 மணியளவில் வெலிகந்த சேவாபிட்டிய பகுதிக்கு அருகில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
வெலிகந்த வனவிலங்கு அதிகாரி சி.ஏ. வனசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில்,
காயமடைந்த யானை சுமார் 30 வயது மதிக்கத்தக்க, எட்டு அடி உயரமான ஒரு ஆண் யானை ஆகும்.
ரயில் மோதலில் யானையின் இரண்டு பின்னங்கால்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த யானை மிகவும் கவலைக்கிடமான நிலையில் பிரதான வீதிகள் மற்றும் கிராமப்புற வீதிகளின் ஊடாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
காயமடைந்த யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக கிரிதலே வனவிலங்கு கால்நடை வைத்தியர் உள்ளிட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களக் குழுவினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.
தொடருந்து மோதி பலத்த காயங்களுடன் சுற்றித் திரியும் காட்டு யானை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space