தெஹிவளை, கடவத்தை வீதியிலுள்ள தகநாயக்க விளையாட்டு மைதானத்துக்கு அருகில் நபர் ஒருவரைக் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (04) இரவு 08.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளார்.
விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பேக்கரி உரிமையாளரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
இதன்போது அந்த பேக்கரி உரிமையாளர் துப்பாக்கிதாரியுடன் போராடியுள்ளதுடன், துப்பாக்கிதாரியிடமிருந்த துப்பாக்கியையும் பிடுங்கியுள்ளார்.
அதன்பின்னர் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், பேக்கரி உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தெஹிவளை கடவத்தை வீதியில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space