தெமட்டகொடை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெமட்டகொடையில் 19 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space