திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பழைய நிலையே தொடரும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைபாட்டை வரும் 22-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதுவே மக்களின் விருப்பம்
திருப்பரங்குன்றம் பிரச்சினையில், தமிழக அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை உறுதியோடு தொடர வேண்டும். மதச்சார்பற்ற கொள்கையை உறுதியோடு கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசை கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.
இது தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறும்போது, ‘திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனர். எனவே, இங்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலையே தொடரும்.
இதுவே மக்களின் விருப்பம். இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது’ என தெளிவுபடுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், `திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்த உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space