யாழ்.திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05.06.2026) உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வு மேற்படி பாடசாலையின் அதிபர் ஆ.றஜீவன் தலைமையில் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காலநிலையில் ஏற்பட்டு வரும் பாதகமான மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மாணவரின் பங்களிப்புக்கள் எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் முத்துத்தம்பி மகா வித்தியாலயப் பழைய மாணவர் கணேசமித்திரனின் வேண்டுகோளுக்கமைவாகப் பழைய மாணவர்களால் பாடசாலையில் பப்பாசிப் பண்ணையொன்றை அமைப்பதற்குத் தேவையான 200 பப்பாசிக் கன்றுகள் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் மரநடுகையும் முன்னெடுக்கப்பட்டது.
திருநெல்வேலியில் உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வு (
Ad Space
Ad Space
Ad Space
Ad Space