திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (02) ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space