திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி
Ad Space
Ad Space
திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு 9:45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஊழியர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, பணப் பையுடன் கொள்ளையன் ஒருவனை ஊழியர்கள் பிடிக்க முயன்றனர்.இதன்போது மற்றைய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதிலும் இலக்கு தவறியதை அடுத்து, இருவரும் மோட்டார் சைக்கிளில் அநுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து மிகிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.கைதான இருவரும் உப்பூவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும், சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரும் எனத் தெரியவந்துள்ளதுடன், இவர்கள் சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.மேலும்,இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space