ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பிரதேச அமைப்பாளர்களது விசேட கூட்டம் ஒன்று அண்மையில் கண்டி திலங்கா ஹோட்டலில் நடை பெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் பாரத் அருள் சாமி தலைமையில் இது இடம் பெற்றது. கண்டி மாவட்ட அமைப்பாளர் எம்பி.விக்னேஷ்வரன் மற்றும் கட்சியின் கண்டி மாவட்ட செயலாளர் குலே கனேஷன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது குலே கனேஷன் தெரிவித்ததாவது,
தித்வா பேரிடர் காரமாணப் பாதிக்கப்பட்ட பெரும் தோட்டங்களைச் சேர்ந்த அனேக மக்களுக்கு இன்னும் நியாயங்கள் பெற்றுக் கொடுக்கப்பட வில்லை. வீடுகளோ அல்லது காணியோ கிடைக்காது பலர் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.
எனவே, தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் ஊடாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவிடம் இது பற்றி கருத்து தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். இதற்கு கூடியிருந்த அங்கத்தவர்கள் பலத்த ஆதரைவைத் தெரிவித்தனர்.
தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பெரும் தோட்டங்களுக்கு நியாயம் வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space