குருநாகல் பிரதேசத்தில் வெள்ளைக்கோட்டில் சென்ற தாய் மற்றும் மகள் மீது தனியார் பேருந்து மோதியதில் மகள் உயிரிழந்துள்ளதுடன், தாய் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் மெல்சிறிபுர, கரந்தகொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐஸ்கிரீம் தன்சல் நிலையத்திற்கு செல்வதற்காக வீதியைக் கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் குருநாகல் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்துள்ளது.
இவர்கள் இப்பாகமுவ, கிரிந்திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகும்.
உயிரிழந்த மாணவியின் தந்தை பாடசாலை ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது.
தந்தையுடன் தாயும் மகளும் தங்களுக்கு சொந்தமான காரில் பொசன் தன்சல் பெற சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் நேற்று காலை முதல் அதிக வாகன நெரிசல் காணப்பட்டுள்ளது. இந்த நெரிசல் காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தாயுடன் சென்ற பாடசாலை மாணவி பலி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space