போதைப் பொருளை ஒழிப்பதற்கான நாட்டில் தற்போதுள்ள " முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய தம்பலகாமம் பொலிஸார் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று (18) திங்கட்கிழமை தம்பலகாமம் கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியில் நடைபெற்றது.
திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள், தனியார் வாகனங்களிலும் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இதில் கந்தளாய் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி,திஸ்ஸபுர இராணுவ முகாமின் இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஸ்டிக்கரில் போதை ஒழிப்பு தொடர்பிலான முறைப்பாடுகளை முறையிட 1818 ஹொட்லைன் இலக்கமும் விற்கின்ற அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் அகன்று செல் போன்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போதை ஒழிப்பு தொடர்பிலான புதிய திட்டய் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தேசிய அபாயகரங்கள் ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் இணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபட்டனர்.
தம்பலகாமத்தில் "முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முன்னெடுப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space