சென்னை மத்திய (கிழக்கு) மாவட்ட பாஜக தலைவர் பி.கிரி கடந்த 3-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் (சைபர் க்ரைம்) ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ‘தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள், ‘மார்பிங்’ படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
இதில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. சைபர் க்ரைம் போலீஸார் சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கை ஆய்வு செய்தபோது திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த நாச்சிமுத்து (46) என்பவர் இயக்கி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தமிழிசை குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space