தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
"யாகாவராயினும் நா காக்க" எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழி மொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்பிற்கு உகந்தது அல்ல.
அரசுக்கு இடையூறு செய்வதற்கும், அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்து இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரல் அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு வைகோ கண்டனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space