அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் முக்கியமான தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, உலகளாவிய வர்த்தகத்திற்கும் எரிசக்தி விநியோகத்திற்கும் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறப்பு மற்றும் பாதுகாப்பானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
நிலவும் பதற்றநிலையை தணிக்கும் முயற்சிகளையும், விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டிய தேவையையும் இந்தியா ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்துள்ளார்.
மேலும், உலக பொருளாதாரத்திற்கும் எரிசக்தி போக்குவரத்திற்கும் முக்கியமான ஹோர்முஸ் நீரிணையின் சீரான செயல்பாடு உலக நாடுகளின் பொதுநலனுக்குத் தேவையானது என்றும் இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த தொலைபேசி உரையாடல், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள பதற்றநிலையை சமாளிக்கும் சர்வதேச முயற்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டிரம்ப் – மோடி இடையே முக்கிய தொலைபேசி பேச்சு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space