ஜோசப் விஜய் எனும் நான்.. என்ற வரிகளோடு முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றார் விஜய்.
இதன்போது, இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரங்கமே அதிரும் வகையில் ஆர்ப்பரித்தனர்.
தமிழ்நாட்டிற்கு நேர்மையான ஆட்சியை தருவேன் என ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன் என உணர்ச்சி பொங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்.
தொடர்ந்து அமைச்சர்களது பொறுப்பேற்பு நிகழ்வு, சத்தியப்பிரமாண நிகழ்வு உள்ளிட்டவை இடம்பெற்று வருகின்றன.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்னும் சற்று நேரத்தில் விஜய் பதவியேற்கவுள்ள நிலையில், விழா மேடைக்கு சற்று முன்னர் அவர் வருகைத் தந்துள்ளார்.
அவரோடு இணைந்து இந்திய பராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் மேடைக்கு வருகைத் தந்துள்ளார்.
இரசிகர்கள், ஆதரவாளர்களின் பெரும் ஆர்ப்பரிப்போடு இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கின்றார்.
ஜோசப் விஜய் எனும் நான்.. ஆண்டவன் மீது ஆணையிட்டு.. உணர்ச்சி பொங்க முதலமைச்சர் பதவியை ஏற்றார் விஜய்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space