ஜேர்மன் தலைநகரான பெர்லினில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு வாடகைகள் 7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளன.
வீட்டு வாடகைகள் 7 சதவிகிதம் வரை அதிகரிப்பு
பெர்லினில் கடந்த இரண்டு ஆண்டுகளில், மின் கட்டணம் போன்ற பிற கட்டணங்கள் தவிர்த்து, ஒரு சதுர மீற்றருக்கான வாடகை 6.9 சதவிகிதம் முதல் 7.71 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
வீட்டின் அளவு, அது அமைந்துள்ள இடம் மற்றும் கட்டிடத்தின் வகை ஆகியவற்றைப் பொருத்து வாடகை வீட்டுக்கு வீடு மாறுபடும் என்பதை சொல்லவேண்டியதில்லை!
உண்மையில், ஒரு காலத்தில் இந்த இடங்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் வாடகை ஓரளவுக்கு சுமாராக இருக்கும் என கருதப்பட்ட இடங்களில் கூட இப்போது வாடகை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக, 1973க்கும் 1990க்கும் இடையில் கட்டப்பட்ட prefab வகை வீடுகளைப் பொருத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் வாடகை 49 சதவிகிதம் வரை அதிகரித்து, சதுர மீற்றர் ஒன்றிற்கு 9.65 யூரோக்களாக உள்ளது!
ஜேர்மன் தலைநகரில் வீட்டு வாடகைகள் 7 சதவிகிதம் அதிகரிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space