ஜேர்மன் தலைநகரான பெர்லினில் உள்ள விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக...
பெர்லின் Brandenburg விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்பாடும், தரையிறக்கமும் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வியாழக்கிழமையன்று கடுங்குளிருடன் கொட்டித் தீர்த்த மழை காரணமாக பல விமானங்களின் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது நாளாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையம் உறையவைக்கும் மழை மற்றும் கருப்புப் பனியால் பாதிக்கப்பட்டுள்ளதால், விமான சேவை எப்போது மீண்டும் தொடரும் என்பது தெரியவில்லை என விமான நிலைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆகவே, பயணிகள் விமான நிலையம் வரும் முன் தங்கள் விமானத்தின் புறப்பாடு முதலான விடயங்கள் குறித்து இணையதளம் வாயிலாக தெரிந்துகொண்டபின் அதற்கேற்ப முடிவெடுக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜேர்மன் தலைநகரில் இரண்டாவது நாளாக விமான சேவை நிறுத்தம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space