நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இரவு நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து உறங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் கொள்ளையர்களுக்குச் சாதகமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெப்பத்திலிருந்து தப்பிக்கக் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைத் திறந்து வைப்பது இயல்பானதே. ஆனால், அவ்வாறு செய்யும் போது முறையான இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு முன்னர் அனைத்துக் கதவுகளும், வெளிப்பக்க வாயில்களும் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய வெளிச்சத்தைப் பேணுவது ஊடுருவல்காரர்களைத் தடுக்க உதவும்.
உங்கள் வீட்டின் அருகாமையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள்.
ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்கு சிறிலங்கா காவல் துறை அவசர எச்சரிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space