ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறை முதலீடுகளுக்கு குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
Ad Space
Ad Space
இலங்கையின் பெந்தோட்டை, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறை முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகள் மற்றும் ஓய்வுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இம்மாளிகைகள் பேணப்பட்டு வந்த போதிலும், தற்போதைய ஜனாதிபதியினால் இம்மாளிகைகள் பயன்படுத்தப்படுவதில்லை. மிகயுயர் கட்டிடக்கலை நுட்பம், அழகிய நில அலங்காரங்கள் மற்றும் வசதிகளைக் கொண்ட இம்மாளிகைகளைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் அரசு கணிசமான நிதியைச் செலவிட வேண்டியுள்ளது.
எனவே, அரசுக்குச் சொந்தமான ஓய்வு விடுதிகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த ஜனாதிபதி மாளிகைகளைச் சுற்றுலாத் திட்டங்களுக்காகத் தகுதியான முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைப் பெற ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Ad Space
Ad Space