தவெக கட்சிக் கொடியின் கலரில் சேலத்தில் புதியதாக 26 அரசு பேருந்துகள் மக்கள் சேவையில் களமிறக்கப்பட்டுள்ளன.சேலத்தில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதியதாக 26 நகர பேருந்துகளின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் இன்று தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் அனைத்தும், வழக்கமான நீல நிறத்துக்கு மாற்றாக, தவெக கட்சி கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு நிற வர்ணங்கள் பூசப்பட்டு புதிய வழித்தடங்களில் களம் இறக்கப்பட்டுள்ளன.