முன்னாள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபயகோன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட, செங்கடகல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதல் பெண் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவால் 1982-ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் ஹெவஹெட்ட தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அபயகோனை நியமிக்கப்பட்டார்.
அன்று முதல் 40 ஆண்டுகளாக நீண்ட காலம் அமைப்பாளர் பதவியை வகித்த மஹிந்த அபயகோன், நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மத்திய மாகாண சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொடக்கத்திலிருந்தே, மஹிந்த அபயகோன், மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் வெற்றிகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரவு மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிய அவர், அப்பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் ஆவார்.
செங்கடகல தொகுதியின் எஸ்.எல்.பி.பி. பிரதம அமைப்பாளராக மஹிந்த அபயகோன்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space