சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் இன்று(1) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாக பொலிஸார் மேற்கோள்காட்டி புளு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிராந்திய நாளிதழான லீ நோவாலிட் (Le Nouvelliste) சுமார் 40 பேர் வரை தீயில் கருகி உயிரிழந்ததாக நம்புவதாக கூறுகின்றது.
100 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும், இதுவரை இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் சரியான விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
தற்செயலாக இடம்பெற்ற விபத்தா அல்லது நாசகார செயற்பாடுகளின் விளைவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எவற்றையும் பொலிசார் வெளியிடவில்லை.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், வெடிப்பு நடந்த நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் பாரில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
10 உலங்குவானூர்திகள், 40 ஆம்புலன்ஸ்கள் மற்றும் சுமார் 150 துணை மருத்துவர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாலிஸ் மருத்துவமனைகள் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை முழு திறனுடன் உள்ளன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சாத்தியமான இடங்களில், நோயாளிகள் சூரிச் போன்ற பிற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நிலைமையை நிர்வகிக்க, மாநில கவுன்சில் அவசரகால நிலையை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் அவசரகால நிலை அறிவிக்க முடிவு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space