பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை சந்தேக நபரான சுரேஷ் சலேவைத் தடுப்புக்காவலில் வைத்து, அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, இன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார்.
சுரேஷ் சலேவுக்கு ஜூலை 1 வரை தொடர்ந்து தடுப்புக்காவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space