தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுகாஷின் தமிழன் கனவு புத்தக வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 3மணிக்கு யாழ்ப்பாணம் இல 37,சேர் பொன், இராமநாதன் வீதியில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சறோஜினிதேவி இளங்கோவன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் ருஷிரா குலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசியுரையினை வாசுதேவக்குருக்கள் மற்றும் யாழ் . மறைமாவட்ட பேராயர் அருட்திரு.கலாநிதி ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வழங்கினர்.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்த சேகரனின் தலைமையுரையினை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் வாழ்ததுரை . சட்டத்தரணி ஜொனி மதுரநாயகத்தின் வாழ்த்துபாஆகியவற்றினை தொடர்ந்து வெளியீட்டுரையினை சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நழகழ்த்தினார்.
நூல் விமர்சனத்தினை யாழ் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை தலைவர் திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் வழங்கினார்.
மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசாவின் தாயார் மற்றும் முன்னாள் போராளி கிட்டலர் ஆகியோர் இணைந்து நூலினை வெளியிட்டு வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நூலினை பெற்றுக்கொண்டார்.
சுகாஷின் "தமிழன் கனவு" புத்தக வெளியீட்டு விழா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space