சீனப் பிரஜையொருவரிடமிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டாரவை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (22) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை 24 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.
சீனப் பிரஜையொருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீன பிரஜையிடம் ரூ.2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் 24 மணி நேர தடுப்புக் காவலில்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space