முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளரும்,சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (18) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் மரணம் அதிர்ச்சிக்குரியதாக காணப்படுகிறது. இதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தவில்லை. முறையான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ள தேவையில்லை.இந்த சம்பவத்தை அரசியலாக்குவது முறையற்றது.
சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில் சாட்சியாளர்கள் உயிரிழப்பது குறித்த சம்பவம் தொடர்பில் பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல்மோசடிகளுடன் தொடர்புடைய பலர் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்துவார்கள் என்றார்.
சி.டி.விக்கிரமரத்ன மரணம்: முறையான விசாரணை நடக்கிறது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space