படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் “தராக்கி டி.சிவராமின்” 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத தூபியில் இன்று (28.04.2026) நடைபெற்றது.
இதன்போது சிவராமின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம்.பாக்கியநாதனும், சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினமும் இணைந்து மலர் மாலை அணிவித்தனர்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் ஆகிய ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம்.பாக்கியநாதன், சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், ஊடக அமைப்புக்களின் உறுப்பினர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் சிவராமின் ஊடகப் பணிதொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான செ.பேரின்பராசா, இரா.துரைரெத்தினம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ.சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space