சாவகச்சேரி நகர சபைக்கான புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Ad Space
Ad Space
சாவகச்சேரி நகர சபைக்கான புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும்- 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் நடைபெறுமென வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சனால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராகப் பதவி வகித்த ஞானப்பிரகாசம் கிஷோர் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை கடந்த ஜூன் மாதம்- 24 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது. இந் நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space