கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபனஹ பகுதியில் உள்ள வீடொன்றினுள் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கட்டானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அக்கரபனஹ பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிபப் பெண் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (25) நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.
கட்டானை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகத்துக்கிடமான முறையில் வயோதிபப் பெண் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space