சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) தம்புள்ள பொலிஸ் பிரிவின் வேவலவெவ பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ள, வேவலவெவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விவசாயியான இந்த நபர், தனது விவசாய நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கிய உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து, 56 வயதுடைய நபர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்புள்ள பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் பலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space