கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேகொட பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் நேற்று திங்கட்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 100 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கந்தானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space